திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் திருவெறும்பூர் பகுதி கழக வார்டு எண் 39, 39 -அ வட்ட திமுக சார்பில் அரசாயி அம்மன் கோயில் திடல் எல்லக்குடி பகுதியில் திமுக தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. பகுதி கழகச் செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். 39 வட்ட செயலாளர் செல்வராஜ் 39. அ வட்ட செயலாளர் வினோத் கனகராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் திருச்சி கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன், தலைமைக் கழக பேச்சாளர் சாவல் பூண்டி
மா.சுந்தரேசன், இளம் தலைமைக் கழக பேச்சாளர் பாலக்கரை விஜயலட்சுமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட துணைச் செயலாளர் அ.த.த.செங்குட்டுவன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் , மாவட்ட மாநகர வட்டக் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
