Skip to content

சென்னையில் திமுக கவுன்சிலர் ஏற்பாட்டில் மாபெரும் கோலப்போட்டி….

சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி திமுக சார்பில் வளசரவாக்கம் 151- வது வார்டு மாமன்ற கவுன்சிலர் சங்கர்கணேஷ் ஏற்பாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கோலம் போட்டியானது நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணக் கோலங்களை போட்டனர். குறிப்பாக இதில் முதல்வரை வாழ்த்தும் விதமாகவும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட செயல் திட்டங்களை குறித்து வாசகங்கள்,இந்தி வேண்டாம் மற்றும்

முதல்வர் ஸ்டாலினின் உருவங்களை வண்ணக்கோலமாக வரைந்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் சிறப்பாக கோலம் போட்ட முதல் 10 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிற 5 ஆம் தேதி மாலை மிக்ஸி, கிரைண்டர், புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன என்பதை குறிப்பிடத்தக்கது. மேலும் மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த மாதம் முழுதும் முதல்வர் பிறந்த நாளை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தி கொண்டாட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

error: Content is protected !!