Skip to content

வடிவேலு-சுந்தர் சி மீண்டும் கூட்டணி… ‘கேங்கர்ஸ்’ ஏப்.24ம் தேதி வெளியீடு…

  • by Authour

சுந்தர்.சி இயக்கத்தில், சுந்தர்.சி-வடிவேலு இணைந்து நடிக்கும் கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு. இதில் கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு சத்யா சி இசையமைத்துள்ளார்.

சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமான தலைநகரம் திரைப்படத்தில் சுந்தர். சி-வடிவேலு காமெடி காட்சிகள் ரசிக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து நகரம் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதற்கு முன்பாக சுந்தர். சி இயக்கத்தில் வெளியான பல படங்களில் நடிகர் வடிவேலுவின் காமெடிகள் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

இந்த நிலையில் 15 ஆண்டுகள் கழித்து சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது அந்த வகையில் இப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகத்திற்கு பிறகு வடிவேலு நடிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து நீண்ட ஆண்டுகள் கழித்து வெளியான மாமன்னன் படத்தில் கவனம் பெற்றார் வடிவேல். மாமன்னன் படத்தில் கிடைத்த வரவேற்பையடுத்து பகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!