Skip to content

தந்தையை கொன்று வீடியோ எடுத்த மகன்- சென்னையில் கொடூரம்

  • by Authour

 ராஜஸ்​தான் மாநிலத்​தைச் சேர்ந்​தவர் ஜெகதீஷ் சங்​களா (42). இவர் தனது மகன் ரோகித் சங்​களா (19) என்​பவருடன் சேர்ந்து சென்​னை, ஏழுகிணறு, வைத்​தி​ய​நாதன் தெரு​வில் தங்​கி​யிருந்து இனிப்பு பலகாரம் செய்​யும் தொழில் செய்து வந்​தார்.

ஜெகதீஷ் சங்​களா ஊரில் உள்ள தனது மனை​வியை கடுமை​யாக அடிக்​கும் வழக்​கம் கொண்​ட​வ​ராம். மேலும் வீட்​டில் எந்த வேலை​யும் செய்​யாமல் பொறுப்பு இல்​லாமல் இருப்​ப​தாக மகன் ரோகித் சங்​களாவை அடிக்​கடி திட்டி அவமானப்​படுத்தி வந்​துள்​ளார். இதனால் தனது தந்தை மீது ரோகித் கடும் கோபத்​தில் இருந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், சில நாட்​களுக்கு முன்​னர் ரோகித் வேறு இடத்​தில் வேலை செய்து சம்​பளப் பணமாக ரூ.17 ஆயிரத்தை வாங்கி வந்து தனது தந்​தை​யிடம் கொடுத்​து​விட்​டு, செல​வுக்கு பணம் கேட்​டுள்​ளார். அப்​போது ஜெகதீஷ் பணத்​தைக் கொடுக்​காமல், மகனை வழக்​கம்​போல் திட்​டிய​தாக கூறப்​படு​கிறது.
இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு ஜெகதீஷ் வீட்​டில் தூங்​கிக் கொண்​டிருந்​தார். அப்​போது அங்கு வந்த ரோகித் இரும்​புக் கம்​பி​யால் தந்​தையை தலை​யில் பலமாக தாக்கி கொலை செய்​து​விட்​டு, கொண்​டித்​தோப்​பில் வசிக்​கும் உறவினர் மன்​கனி ராமிடம் போன் மூலம் தந்​தையை கொலை செய்​து​விட்​ட​தாக தகவல் கூறி​யுள்​ளார்.

மேலும் தந்தை ரத்​தம் வடிந்த நிலை​யில் சடல​மாகக் கிடந்​ததை வீடியோ​வாக எடுத்து அதை​யும் உறவினருக்கு அனுப்​பி​யுள்​ளார். ஏழுகிணறு போலீ​ஸார் சடலத்தை மீட்டு ஸ்டான்லி மருத்​து​வ​மனைக்கு அனுப்பினர்.ரோகித்தை  கைது செய்​தனர்.

 

error: Content is protected !!