Skip to content

திருச்சியில் போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த சமையல் மாஸ்டர் தற்கொலை…

  • by Authour

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ காலனி 17 ஆவது கிராஸ் பகுதி சேர்ந்தவர் ராஜா (48). இவர் ரெயில்வே சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர் அடிக்கடி குடிபோதையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 22ந்தேதி நடந்த சம்பவத்தில் போக்சோ வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அண்மையில் அவர் ஜாமினில் வெளியே வந்தார் .இந்நிலையில் நேற்று மதியம் ராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!