Skip to content

சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி: இந்தியா- ஆஸ்திரேலியா நாளை மோதல்

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபிக்கான கடைசி லீக் போட்டி நேற்று துபாயில் நடந்தது.  ஏற்கனவே  ஏ பிரிவில் இரு அணிகளும் அரை இறுதிப்போட்டிக்கு  தகுதிபெற்றுவிட்ட நிலையில் இந்த போட்டி சம்பிரதாயத்துக்காக இந்த போட்டியில் மோதின.  டாஸ்வென்ற நியூசிலாந்து  இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவா் முடிவில்  9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்தது.

அதன் பிறகு ஆடிய  நியூசிலாந்து  45.3 ஓவரில்  205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால்  இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் இந்தியா  லீக் ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத அணியாக  உருவெடுதத்து

இந்த வெற்றியின் மூலம் இந்தியா நாளை, பி பிரிவல்   2ம் இடத்தில்  உள்ள  ஆஸதிரேலியாவுடன்  அரையிறுதியில் மோதுகிறது. இந்த போட்டி துபாயில் நடைபெறும்.  நாளை மறுநாள் 2வது அரை இறுதிப்போட்டி  பாகிஸ்தானில் நடக்கிறது. இதில்  நியூசிலாந்து,   தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் மோதுகிறது.

அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற்றால்,  இறுதிப்போட்டி பாகிஸ்தானில் நடக்கும். இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாவிட்டால், இறுதிப்போட்டி பாகிஸ்தானில் 9ம் தேதி நடத்தப்படும்.

error: Content is protected !!