தமிழ்நாட்டில் இன்று பிளஸ் 2 மொழித்தேர்வு நடந்தது. காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை இந்த தேர்வு நடந்தது. தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ, மாணவிகள் கூறும்போது, தேர்வு என்றதும் பயம் இருக்கத்தான் செய்தது. ஆனால் வினாத்தாளளை பார்த்ததும் பயம் ஏற்படவில்லை. ஒரு வரியில் பதில் அளிக்க வேண்டிய வினாக்கள் எப்போதும் டுவிஸ்ட் வைத்து கேட்பார்கள். ஆனால் இன்று நடந்த தேர்வில் அதுவும் இல்லை. தேர்வு எளிதாகவே இருந்தது. அனைத்தும் படித்த பாடங்களில் இருந்தே வந்ததால் மகிழ்ச்சியாகவே இருந்தது’ என்றனர்.
தமிழ்த் தேர்வு எளிதாக இருந்தது – மாணவர்கள் மகிழ்ச்சி
- by Authour
