அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (03.03.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள், சிறப்பு கல்விகள், கல்வி உதவித்தொகைகள், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகைகள், திருமண நிதியுதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் தெருமுனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி துவக்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இவ்விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சார குழுவினர் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நல திட்டங்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பிரச்சாரத்தை மேற்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள நல அலுவலர் மஞ்சுளா, இதர அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.