திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபி(25), சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். கோபி அந்த நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் முன்பணம் பெற்றுவிட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் வேலையிலிருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் அவரை தேடி வந்த நிலையில் எங்கும் கிடைக்காமல் இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் வானகரம் மீன் மார்க்கெட் டிராவல்ஸ் உரிமையாளர் விஜய் நின்று கொண்டு இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த கோபியை மடக்கி பிடித்து சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் அடைத்து வைத்து அவரது நண்பர் திவாகருடன் சேர்ந்து பணத்தை கேட்டு மிரட்டி அடித்து தாக்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த கோபி இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கடத்தி தாக்கிய தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் விஜய்(27), அவரது நண்பர் திவாகர்(24), ஆகிய இருவரை கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
பணத்தகராறு… டிரைவரை கடத்தி மிரட்டிய டிராவல்ஸ் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது…
- by Authour
