நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், தற்போது அவர் பாஜகவில் உள்ளார். இவரது மகன் துஷ்யந்த் சில படங்களில் நடித்தார். இவர் ஈசன் புரடக்ஷன்ஸ் சார்பில் ஜகஜால கில்லடி என்ற படத்தை தயாரிக்க தனபாக்கியம் என்ற நிறுவனத்தில் ரூ. 3.74 கோடி கடன் வாங்கி இருந்தார். இந்த கடனை திரும்பி செலுத்தவில்லை. தற்போது அசலும் வட்டியுமாக ரூ.9கோடியே 39 லட்சம் ஆகி உள்ளது. தனபாக்கியம் நிறுவனத்திற்கு பதிலும் அளிக்கவில்லை. இது தொடர்பாக அந்த நிறுவனம் ஐகோர்ட்டை நாடியது.
அதன் பேரில் இன்று வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. சிவாஜி மகன் ராம்குமார், பேரன் துஷ்யந்த் ஆகியோர் சென்னையில் சிவாஜியின் பூர்வீக வீட்டில் வசிக்கிறார்கள். அந்த வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது. இது தொடர்பாக சார் பதிவாளருக்கும் தகவல் தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.