கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தோகைமலை பகுதியில் நடைபெறும் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென தமிழக அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் சமூக தரவுத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய விவரங்களை பதிவேற்றம் செய்தல் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.
தோகைமலை பகுதியில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாமில் வருவாய்த்துறை உதவித்தொகை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் இலவச வீடு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், போட்டித் தேர்வுக்கான பயிற்சி தனியார் வேலைவாய்ப்பு, வங்கிக் கடன் உதவி, மருத்துவ
காப்பீடு திட்டம், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உதவி உபகரணங்கள் பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது முகாமில் அனைத்து மாற்றத்தினாலிகளும் கலந்து கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சார கலை நிகழ்ச்சி நடைபெற்றது.