மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சிங்காரவேலர் தெருவை சேர்ந்த மீனவர் ராஜீவ் காந்தி (39). இவர் கடல்சார்ந்த கப்பல்போக்குவரத்து படகு எஞ்சின், மீன்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்களை வாங்கி விற்பனை செய்தும் பழுதுநீக்குதல் தொழிலை வீட்டிலேயே செய்து வருகிறார். ராஜீவ் வெளியூர் சென்ற நிலையில் இன்று காலை இவரது மனைவி ஜானகி வீட்டிலிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை கழட்டி வீட்டின் உள்ளே மின்சாரத்தில் சார்ஜ் போட்டுள்ளார். சிறிது நேரத்தில் திடீரென பேட்டரி வெடித்து சிதறியது. அப்போது வீட்டிலிருந்த படகுகுகளுக்கு பொறுத்தும் புதிய ஹை ஸ்பீடு எஞ்சின்களில் தீ மளமளவென பரவியது. மேலும் வீட்டின் மின்சார இணைப்பு வழியாக தீ பரவி டிவி, பிரிட்ஜ் ,ஏசி மிஷின் வெடித்து சிதறியது. வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். தகவல் அறிந்து வந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தால் ரூபாய் 25 லட்சத்துக்கு மேற்பட்ட படகு என்ஜின்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம் அடைந்துவிட்டதாக கதறியழுத ராஜீவ்வின் மனைவி ஜானகி எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் பேட்டரியால் (joy e-bike electric scooter) தங்கள் குடும்பம் நடுத்தெருவில் நிற்பதாக கலங்கி தவித்தார். இதுகுறித்து பொறையார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து .. 25 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம்….
- by Authour
