தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1 ம் தேதி தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. திமுகவினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் எழுச்சியுடன், முதல்வர் பிறந்தநாள் விழாைவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
38 மாவட்டங்களிலும் விழா கொண்டாடப்பட்டாலும், அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போன்று, கரூ மாவட்ட திமுக ஒரே நாளில் 500 இடங்களில் முதல்வாின் பிறந்தநாளை கொண்டாடி சாதனை புரிந்தது. கரூர் மாநகரம் முதல் மாவட்டத்தின் சிற்றூர் வரை மார்ச் 1ம் தேதி விழாக்கோலம் பூண்டது.
அன்றைய தினம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் போல கரூர் மாவட்டம் வீதிக்கு வீதி விழாக்கோலம் கண்டது. ஒவ்வொரு இடங்களிலும் திமுக கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் பிறந்த தினமான மார்ச் 1ம் தேதி பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கி குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
மத்திய மாநகர திமுக செயலாளர் வி.ஜி. எஸ் குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் கனகராஜ் , மண்டல குழு தலைவர் ஆர்.எஸ். ராஜா, மாவட்ட கழக துணை செயலாளர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட திமுக சார்பில் தான்தோன்றி மலை அன்பாலயம் காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு காலை
சிற்றுண்டியை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் 72 வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகள் 48 மாநகராட்சி வார்டுகள் மூன்று நகராட்சிகளில் 21 இடங்கள் எட்டு பேரூராட்சிகளில் 24 இடங்களில் என மொத்தம் 250 இடங்களில் ஆண்கள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகள் வழங்கினார்.
முன்னதாக வீரர், வீராங்கனைகள், ‘ தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற உறுதிமொழியை அமைச்சர் முன்னிலையில் எடுத்துக் கொண்டனர்
இந்நிகழ்ச்சியில், மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன் , மாநகர திமுக செயலாளர் கனகராஜ் மாவட்ட கழகத் துணைச் செயலாளர்கள் மகேஸ்வரி ரமேஷ்பாபு .கருணாநிதி மற்றும் மாநகர பகுதி கழகச் செயலாளர்கள், திமுக பல்வேறு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.