கடந்த ஜனவரி மாதம் கோவை அன்னூரில் அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்திய அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமிக்கு, பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கான அழைப்பிதழிலும், மேடையிலும் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., – ஜெ., புகைப்படங்கள் இடம் பெறவில்லை என்கிற காரணத்தை சுட்டிக்காட்டி, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதனால், அ.தி.மு.க.,வுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அதிமுக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்கும்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி உள்ளிட்ட நிர்வாகிகளின் புகைப்படங்களை எந்தெந்த சைஸில் அச்சிட வேண்டும் என்பது குறித்து கட்சியின் மேலிடம் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இதன்படி பேனர் ஒரு பகுதியில் இரட்டை இலை இடம் பெற வேண்டும். அண்ணாதுரை படம் சிறிய அளவில் இருந்தால் போதும்; எம்.ஜி.ஆர்., படம் அதை விட பெரியதாக இருக்க வேண்டும்.பேனரின் ஒரு புறம் ஜெ., படம் பெரிதாக இருக்க வேண்டும்; அதற்கு நிகராக பொது செயலாளர் பழனிசாமி மட்டும், அதே சைஸில் இருக்க வேண்டும். அதற்கு கீழ் தலைமை கழக நிர்வாகிகள் படமும், அதை விட சற்று சிறிதாக, மாவட்ட செயலாளர் படமும் இருக்க வேண்டும். மற்ற நிர்வாகிகளின் படங்கள், ஒரே சைஸில் வரிசையாக கீழ்ப்பகுதியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என அதிமுக தலைமை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
ஜெ., போட்டோ சைசில் எடப்பாடிக்கும் போட்டோ.. நிர்வாகிகளுக்கு அட்வைஸ்
- by Authour
