திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்தில் இன்று அவரது பிறந்த நாளை ஒட்டி திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் ப.குமார், மு. பரஞ்ஜோதி, ஜெ.சீனிவாசன் ஆகியோர் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி சிவபதி, ,வளர்மதி, அமைப்பு செயலாளர்கள் டி.ரத்தினவேல் ஆர்.மனோகரன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்டம்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், ஜோதி வாணன், மாவட்ட பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இன்ஜினியர் இப்பிராம்ஷா, திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி,
அணி நிர்வாகிகள் இளைஞரணி ரஜினிகாந்த், இலக்கிய அணி பாலாஜி, பகுதி செயலாளர்கள் என்ன பூபதி அன்பழகன், நாகநாதர் பாண்டி, கலைவாணன், புத்தூர் ராஜேந்திரன்,வாசுதேவன்,இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் சில்வர் சதீஷ்குமார் டி.ஆர்.சுரேஷ் குமார்,கலைப்பிரிவு பொருளாளர் சாதிக் அலி,எனர்ஜி அப்துல் ரகுமான்,பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ் முத்துமாரி சசிகுமார் ஜெயராமன் கௌசல்யா,நிர்வாகிகள் காசிபாளையம் சுரேஷ்குமார் தியாகராஜன் வக்கீல் தினேஷ் பாபு, வசந்தம் செல்வமணி வசந்தகுமார், ரமணிலால் மற்றும்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் நிர்வாகிகள் சுபத்ராதேவி,ஜெயலலிதா பேரவை சூரியூர் ராஜா என்கிற ராஜ மணிகண்டன்,
எஸ்.பி பாண்டியன் ராவணன், அருண் நேரு, பொதுக்குழு சாந்தி, மாலை அணிவித்த பின் முன்னாள் அமைச்சர் கே.டி..ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி… தென்னிந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஏழிசை மன்னர் என்ற பெயர் பெற்ற மறைந்த திரைப்பட நடிகர் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்தை சட்டமன்றத்திலே அறிவித்து அவருக்கு முழு உருவ சிலை அமைத்து கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமி தான். எடப்பாடியாரின் ஆணையை ஏற்று அவர் ஆணைக்கிணங்க அதிமுகவினர் இங்கு வந்து மாலை அணிவித்துள்ளோம். பிற்படுத்தப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும், பெருபான்மையினருக்கும் தேசப்பற்றுள்ள தலைவர்களுக்கும் மணிமண்டபங்கள் அமைத்து அவர்கள் பிறந்த நாள் விழாவிலே கௌரவிக்கின்ற நிகழ்ச்சியை தொடர்ந்து செய்திருக்கின்ற அரசு அம்மாவின் அரசான எடப்பாடி அரசுதான். அற்புதமான கூட்டணியை, அருமையான கூட்டணியை எடப்பாடியார் அமைப்பார். அதிமுக வெற்றியடைய கூடிய வலுவான கூட்டணியை வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் கட்டாயம் அடைப்பார். முதலமைச்சர் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் அவர் நன்றாக இருக்கட்டும். அவரது ஆட்சி வேதனை படக் கூடியதாக இருந்து கொண்டிருக்கிறது நேற்று சீமான் விஷயத்தில் அவரது வீட்டில் காவலாளியை தாக்கிய நிகழ்வு ஒன்றே போதும். சர்வாதிகாரமான ஆட்சியாக தான் இதை மக்கள் பார்க்கிறார்கள் இது கண்டிக்கத்தக்கது. அண்ணா திமுகவிற்கு கிளை கழகம் தோறும் கிராமங்கள் தோறும் பல கோடி தொண்டர்கள் உள்ள கட்சி இரண்டு கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் உள்ள கட்சி அதிமுக. இந்த கட்சியுடன் போட்டி போட கூடிய அளவிற்கு தமிழகத்தில் எந்த கட்சிக்கும் வாய்ப்பும் கிடையாது, இடமும் கிடையாது. மும்மொழிக் கொள்கையில் யார் நாடகம் ஆடினாலும் சரி எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடியார் எடுத்திருக்கின்ற முடிவு, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எடுத்திருக்கின்ற முடிவு, புரட்சித்தலைவி அம்மா எடுத்திருக்கின்ற முடிவை தான் எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்திருக்கின்றார். இருமொழிக் கொள்கைதான் வேண்டும் அதற்கு தான் அதிமுக ஆதரவு கொடுக்கும். மூன்றாவது மொழி விருப்ப பாடத்தில் படிக்கலாம் அதை திணிக்க கூடாது இது எங்கள் கட்சியினுடைய முடிவு. அதிமுகவை யாரும் பலவீனப்படுத்த முடியாது அதிமுகவில் இல்லாதவர்கள், 30 வருடங்களுக்கு முன்பு கட்சியை விட்டு வெளியேறியவர்கள், வேறு கட்சியில் சேர்ந்தவர்கள் இரட்டை இலை எனக்கு வேண்டும், கட்சி எனக்கு வேண்டும் என்றால் யாரும் கொடுப்பதற்கு தயார் இல்லை சுப்ரீம் கோர்ட்டும் பார்க்காது தேர்தல் கமிஷனர் பார்க்காது அதிமுகவும் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது .
அவர்கள் கட்சியிற்கு தொடர்பே இல்லாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வேறு கட்சியில் இணைந்துள்ளவர்கள் இனிமேல் கட்சியில் சேர வேண்டும் என கூறினால் எடப்பாடி யாரிடம் கடிதம் கொடுத்து அவர் விருப்பப்பட்டால் சேர்ப்பார்கள் என்றார் இதுதான் கட்சியினுடைய நடைமுறை இன்று அதிமுக எம்ஜிஆருக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மாவிற்கு பிறகு எடப்பாடி யாரின் பொற்கரங்களில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது . அவர் சொல்வதுதான் அதிமுகவில் வேத வாக்கு . 2021 போல் தேர்தல் கூட்டணி அமையுமா? எனக் கேட்டபோது அதைப்பற்றி எடப்பாடியார் பார்த்துக் கொள்வார் தேர்தல் வருகின்ற பொழுது அற்புதமான கூட்டணி அமைப்பார் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தேவையான நல்ல கூட்டணி அமையும். இன்றைக்கு மத்திய அரசை சார்ந்த ஒரு கட்சி இருக்கலாம் மாநில அரசை சார்ந்து ஒரு கட்சி இருக்கும். ஆளுங்கட்சியை எதிர்த்து கட்சியை நடத்துகின்ற ஒரே திறமையுள்ள எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர் எடப்பாடியார் அவர்கள் தான். ஆகவே எந்த கூட்டணி வலுவாக இருக்கும் . யாரை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், சிறுபான்மை மக்கள், பெரும்பான்மை மக்கள் , பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்கள் யாரால் நன்மை கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தி அந்த கூட்டணியை வெற்றி கூட்டணியாக அமைப்பார் எடப்பாடியார் . திமுக தேர்தல் வாக்குறுதியாக முதலில் அறிவித்தது நீட் தேர்வு ரத்து அதையே நிறைவேற்றவில்லை இதுபோல் நிறைய சொல்லலாம் சொல்வதற்கு நேரமில்லை திமுகவில் மு க ஸ்டாலின் அறிவித்த தேர்தல் அறிக்கையில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை மக்களுக்கான திட்டங்கள் செய்வது கிடையாது மாணவர்களுக்கான திட்டங்கள் கிடையாது தாலிக்கு தங்கத்தை நிறுத்தியுள்ளார் திருமண உதவித் தொகை திட்டம் லேப்டாப் வழங்கும் திட்டம் 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார் ஒரு லட்சம் கோடி வருஷத்திற்கு அதிகமான வீட்டு வரி சொத்து வரி குப்பை வரி என அதிகமான வரி விதித்திருக்கிறது. 9 லட்சம் கோடி என்ன செய்தார் என்று தெரியாமல் இருக்கிறது . இந்த ஆட்சி வேண்டுமா? என்பதே நாட்டு மக்கள் மத்தியில் பேச்சாக உள்ளது கூடிய விரைவில் இந்த ஆட்சி வீட்டுக்கு போக போகிறது அதிமுக ஆட்சி ஆட்சிக்கு வரப் போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
