சென்னை, அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர். தினேஷ் பாபு ரத்த வௌ்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தினேஷ் பாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகளை தீவிரமாக போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
தாசில்தார் அலுவலகம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை…சென்னையில் பரபரப்பு..
- by Authour
