Skip to content

கரூர் அருகே 9ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்…. ஆசிரியர் பணி நீக்கம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலிகவுண்டனூரை சேர்ந்தவர் சக்திவேல் மகன் அபிஷேக் 14. இவர் கோமாளிப்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அப்பள்ளியில் கழிவறையில் தற்போது கட்டப்பட்டு வருவதால் இடைவேளையின் போது மாணவர்கள் பள்ளிக்கு வெளியே இயற்கை உபாதைக்கு செல்கின்றனர்.

அவ்வாறு இயற்கை உபாதைக்கு செல்லும் பொழுது சில நிமிடம் தாமதமாக வந்ததால் அபிஷேக்கை உடற்கல்வி ஆசிரியர் சரவணன் அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் மற்ற மாணவர்கள் தாமதமாக வந்தபோதிலும் அபிஷேக்கை மட்டும் தொடர்ந்து மூன்று முறையாக உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதாகவும், இந்நிலையில் நேற்று அவ்வாறு இடைவேளையின் போது சென்று தாமதமாக அந்த அபிஷேக்கை பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் சரவணன் மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் முன்னிலையில் தொடர்ந்து குச்சியால் அடித்ததாகவும், இதனால் காயமடைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும் அப்பள்ளியிலேயே வைத்து ஐஸ் கட்டி ஒத்தடம் உள்ளிட்ட முதலுதவிகளை செய்துள்ளனர்.

ஆனால் மாணவனின் குடும்பத்தினருக்கு எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

பள்ளி முடிந்து மாணவன் வீட்டிற்கு சென்ற நிலையில் சோர்வாக இருந்த மாணவன் பெற்றோர்களின் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அப்போது மாணவன் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் அடித்ததை கூறியுள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் மாணவனை குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் பள்ளியில் ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவனை உயிருக்கு ஆபத்தான நிலையில் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு மாணவனை தாக்கியதாக கூறப்படும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் சரவணனகுமாரை பணி நீக்கம் செய்துள்ளனர்.

error: Content is protected !!