புதுக்கோட்டை டி.வி.எஸ் கார்னர் பகுதியில்,நெடுஞ்சாலைத்துறைசார்பில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில், புதிதாகக் கட்டப்படவுள்ள சாலை சந்திப்பு மேம்பாடு பணியினையும் மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சி, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.4 கோடி மதிப்பீட்டில், புதிதாக கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை கட்டடப் பணி அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல்
நாட்டினர். இந்த விழாவில் மேயர் திலகவதி செந்தில் , முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.கோ.ராஜராஜன் , மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் தவ.பாஞ்சாலன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்மு.வனஜா, கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) ஆர்.தமிழழகன்,மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.