திருச்சி உறையூர், பாளையம் பஜாரைச் சேர்ந்தவர் மகாமுனி (68). அதே பகுதியில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலின் மேர்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து மகாமுனிஅளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து உறையுர், குறத்தெரு, சாராயப்பட்டறை சந்தைச் சேர்ந்த விஜயராஜ் (19) என்ற வாலிபரை கோயில் உண்டியலை கொள்ளையடித்ததாக கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…. .திருச்சியில் துணிகரம்….
- by Authour
