Skip to content

திருச்சி கோர்ட் முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம்….. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

நடப்பு ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை ரூ 25 லட்சமாக உயர்த்திட கோரியும் திருச்சி கோர்ட்டு முன்பு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கதலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இன்று வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.ஜாக் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

இதில் மூத்த வழக்கறிஞர்கள் மகேந்திரன் சகாபுதீன் வீராச்சாமி ராஜசேகர் சேதுராமன் வக்கீல் சங்க துணை தலைவர் மதியழகன், செயலாளர் சுகுமார், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சுதர்சன், சி.முத்துமாரி, சரவணன், கங்காதரன், வினிஸ், திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட், துணைத் தலைவர் சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன்,செயற்குழு உறுப்பினர் கௌசல்யா,லால்குடி மகாலட்சுமி வழக்கறிஞர் கள் ஐயப்பன், ஆர்.ஏ. அஸ்வின் ராஜா ,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!