Skip to content

கரூர் அருகே 35க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்த தெருநாய்கள்…. 15 ஆடுகள் பலி….

கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள பணப் பாளையம் பகுதியில் பரமசிவம் என்பவர் சுமார் 60க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் இரண்டு பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு இரவு நேரத்தில் ஆடுகளைப்

பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடு மற்றும் ஆட்டுக்குட்டிகளை நான்குக்கு மேற்பட்ட நாய்கள் ஒன்று சேர்ந்து 35க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறி உள்ளது இதில் 15 ஆடுகள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 20 ஆடுகள் நாய்கள் கடித்த காயத்துடன் இருப்பதாகவும் உயிரிழந்த ஆட்டுக்குட்டியின் மதிப்பு 2 லட்சத்திற்கும் மேல் இருக்கும் எனவும், இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு கடிபட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

க.பரமத்தி பகுதியில் ஆடுகள் வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ள நிலையில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், இரவு நேரத்தில் மனிதர்கள் செல்லும் பொழுது நாய்கள் துரத்தி வருவதால் உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதாகவும், அரசு உடனடியாக நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த ஆட்டிற்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!