தஞ்சை மாவட்டம், பனையக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் அரவிந்தன் (27). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று அரவிந்தன் பணியை முடித்துவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். தஞ்சை அருகே காட்டூர் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத டிப்பர் லாரி அரவிந்தன் பைக் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அரவிந்தன் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடன் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அரவிந்தனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் தஞ்சாவூா் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை அருகே டிப்பர் லாரி டூவீலரில் மோதி கண்டக்டர் பலி….
- by Authour
