Skip to content

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பில் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட தலைவர் MA முகமது ராஜா தலைமை தாங்கினார். திருச்சி மேற்கு மாவட்ட தலைவரும் 28 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான அ.பைஸ் அகமது.MC கண்டன கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ் கான், விசிக துணை பொது செயலாளர் தோழர் வன்னி அரசு, தமுமுக துணை பொது செயலாளர் மைதீன் சேட் கான் மௌலவி சிராஜ்தீன் மகளீர் பேரவை மாநில பொருளாளர் ஷான் ராணி ஆலிமா

உள்ளிட்ட தோழமை கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

வக்ஃபு வாரியங்களை முடக்கி வக்ஃபு சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான பாரபட்சமான விதிகளைக் கொண்டிருக்கும் வக்ஃபு திருத்த மசோதா 2024ஐ முஸ்லிம்களும், மதசார்பற்ற கட்சிகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும்

இந்த மசோதா அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்துள்ள பல உரிமைகளை பறிக்கும் வகையிலும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை பாரபட்சமாக கருதும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், இத்திருத்த சட்டத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பபட்டன.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளார்கள் இப்ராகிம், அஸ்ரப் அலி, மாவட்ட பொருளாளர்கள் காஜா மொய்தீன் ஹுமாயூன் கபீர், தமுமுக மாவட்ட செயலாளர்கள் இப்ராகிம் ஷா இலியாஸ், தலைமை கழக நிர்வாகிகள் வழ நூர்தீன், நஜீர், சபீர் கான், அப்பீஸ் கான், மண்டல நிர்வாகிகள் தல்ஹா பாபு, திருச்சி உஸ்மான், முகமது கான், மாவட்ட துணை செயலாளர்கள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், மகளீர் பேரவை நிர்வாகிகள், ஜமாத்தார்கள், பொதுமக்கள்,
திரளாக பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர்.

error: Content is protected !!