Skip to content

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்திய நேரப்படி அதிகாலை 5.14 மணியளவில்  ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.08 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.51 டிகிரி கிழக்கு  தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை .இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு இந்தியாவின் வட மாநிலங்களில் சிலவற்றிலும் உணரப்பட்டது.

முன்னதாக, கடந்த மாதம் 3ம் தேதி பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!