பாலியல் வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் இன்று சம்மன் ஒட்டினர். அப்போது தகராறு ஏற்பட்டதால், போலீசார் சீமான் வீட்டு செக்கியூரிட்டி உள்பட 2 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடந்தபோது சீமான், ஓசூரில் இருந்தார். அவரிடம் இது குறித்து நிருர்கள் கேட்டபோது சீமான் கூறியதாவது:
நாளைக்கு விசாரணைக்கு வர முடியாது என்ன செய்வீரர்கள்? சம்மன் ஒட்டுவதால் எனக்கு அசிங்கம் இல்லை. நான் விசாரணைக்கு வருவேன் என சொல்லிவிட்டேன். எங்கும் ஓடமாட்டேன். ஆட்சியாளர்கள் தான் அவர்களது செயலால் அசிங்கப்பட போகிறார்கள். இது கேவலமான நடவடிக்கை.
இந்த வழக்கில் இவ்வளவு தீவிரம காட்டும் நீங்கள், அண்ணா பல்கலை பாலியல் வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏன் தீவிரம் காட்டவில்லை. நான் தான் வருவேன் என்று கூறி விட்டேனே, ஏன் கதவில் போய் ஒட்டுகிறீர்கள்.?
சம்பந்தப்பட்ட அந்த பொம்பளைய கூட்டிட்டு வா, என்னையும் கூட்டிட்டு வந்து ஒண்ணா வைத்து விசாரி. இதற்கு பயப்படுகிற ஆள் நான் இல்லை. நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு வர முடியாது. என்ன செய்வ?
இது வழக்கே இல்ல. என்ன சமாளிக்க முடியலன்னு அந்த அம்மா வழக்கு போட்டு இருக்காங்க. ஜெயலலிதா ஆட்சியில், எடப்பாடி ஆட்சியில் ஏன் புகார் கொடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் புகார் கொடுக்கிறார்களே ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.