Skip to content

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம்…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், ஊரக வேலை உறுதி சட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாகப் புகார்களை நிவர்த்தி செய்யவதற்கும் 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர், கடலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, நெல்லை, நாகை, தேனி, ஈரோடு, தென்காசி, நீலகிரி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!