அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டல் கிராமத்தில் நேற்று ஒரு மல்யுத்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண 40 வயதான ராகேஷ் என்ற மல்யுத்த வீரர் வந்திருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ராகேஷை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
படுகாயமடைந்த ராகேஷை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகிறார்கள்.
சுட்டு கொல்லப்பட்ட ராகேஷ் கடந்த பல ஆண்டுகளாக சோஹாட்டி கிராமத்தில் அகாரா என்ற ஆன்மிக மையம் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.