சீமான் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்த நடிகை விஜயலட்சுமியிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. நாளை ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கியுள்ள நிலையில் பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காலை 10 மணி முதல் 5 மணி நேரத்துக்கும் மேலாக விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சீமானுக்கு எதிராக முக்கிய ஆதாரங்களை வளரசவாக்கம் போலீசாரிடம் நடிகை விஜயலட்சுமி சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியது.
சீமான் மீது பாலியல் புகார்… நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை..
- by Authour
