நடப்பு ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை ரூ 25 லட்சமாக உயர்த்திட கோரியும் திருச்சி கோர்ட்டு முன்பு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் மதியழகன் தலைமையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் சுகுமார் வரவேற்றார் .ஜாக் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், செயற்குழு உறுப்பினர் முத்துமாரி, திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் சசிகுமார்,முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன்,வழக்கறிஞர்கள் லால்குடி மகாலட்சுமி. ,கிருபாகரன், விக்னேஷ், கோபிநாத், கோகுல், சரவணன்,பிரகாஷ், சரண்ராஜ், சந்தோஷ் குமார்,என்.எஸ்.திலீப் அஸ்வின் ராஜா, நிர்வாககுழு உறுப்பினர் வினேஷ்குமார்,
மூத்த வழக்கறிஞர் லோகநாதன், முன்னாள் குற்றவியல் சங்க தலைவர் சீனிவாசன்,துணை தலைவர் செந்தில்நாதன், செயற்குழு உறுப்பினர் சந்திரமோகன், வழக்கறிஞர் ஆனந்த், வினேஷ்குமார் ,பெரியசாமி, , வடிவேல் சாமி, மூத்த வழக்கறிஞர் வனஜா, எழிலரசி, கோகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வக்கீல்கள் கோரிக்கைகளை கோஷங்கள் எழுப்பியவாறு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
