Skip to content

யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் கவலையில்லை….. திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு..

  • by Authour

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் அம்பிகாபதி, தலைமையில் நடந்தது.மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ,மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர். இன்று தனது கட்சியின் 2-ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் பிரசாந்த் கிஷோருடன் மேடையேறியுள்ளார் நடிகர் விஜய். யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை. ஏனெனில் பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர். தனது கட்சிக்கு டெப்பாசிட் கூட வாங்காதவர். பீகார் தேர்தல் முடிவுகள் அதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.
அவர் இங்கு வந்து தொகுதி வியூகங்கள் வகுப்பதெல்லாம் எப்படி இருக்கும்? திமுக தலைவர் அதைத்தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
இந்தியாவே வியக்கும் வண்ணம் திராவிட மாடல் ஆட்சி செய்து அடித்தட்டு மக்கள் முதல் அறிஞர்கள் வரை பாராட்டும் நம்பர் ஒன் முதல்வர் திமுக தலைவர் மு.க .ஸ்டாலினின் 72 -வது பிறந்த நாளையொட்டி திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர,பகுதி பேரூர் கிளைக் கழகங்கள் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல், பொதுக்கூட்டங்கள் நடத்தி மிகவும் சிறப்பாக கொண்டாடுவது, அன்னை தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கும் வகையில் மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது என அறிவித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் பழனியாண்டி, சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், முன்னாள் எம்.எல்.ஏ. பரணிக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,பகுதிச் செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், நாகராஜன், கமால் முஸ்தபா, ராம்குமார், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,
வர்த்தக அணி தொழிலதிபர் ஜான்சன் குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல்அகமது திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,மாநகர துணை செயலாளர்கள் கவுன்சிலர் கலைச்செல்வி, எம்.ஏ.எஸ். மணி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் முள்ளிப்பட்டி பால்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் வழக்கறிஞர் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத், கவுன்சிலர்கள் மஞ்சுளாதேவி, பாலசுப்பிரமணியன், ராமதாஸ், புஷ்பராஜ், செல்வி, வட்டச் செயலாளர்கள் பி.ஆர்.பாலசுப்பிரமணியன், தனசேகர், வாமடம் சுரேஷ், மார்சிங் பேட்டை செல்வராஜ், நிர்வாகிகள் டோல்கேட் சுப்பிரமணி, என்ஜினியர் நித்தியானந்தம், அரவானூர் தர்மராஜன்,தொ.மு.ச மண்டல செயலாளர் குணசேகரன், மின்வாரிய தொழிற்சங்கம் சோலை பாஸ்கர், எம்.ஆர்.எஸ்.குமார், அபூர்வா மணி, தென்னூர் ராஜ்குமார், பந்தல் எஸ். ராமு ,சர்ச்சில், ரஜினி கிங்,உள்படை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!