மாமல்லபுரத்தில் இன்று நடந்த தவெக 2ம் ஆண்டு விழாவில் கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது: பிரசாந்த் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது மகிழ்ச்சி. வரும் தேர்தலில் 1967, 77 போல புரட்சி நடக்கும். அப்போது நாங்கள் ஒரு முக்கிய சக்தியாக மாறுவோம்
அரசியல் வேறு லெவல் தான். அரசியல்ல மட்டும்தான் வித்தியாசமான உலகத்தை பார்க்கிறோம். யார், யாரை எபபோ எதிர்ப்பாாங்க, யார், யாருடன் சேருவாங்க, என்ற தெரியாது. அதனால் தான் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்ல, நிரந்தர எதிரியுமில்ல என்பார்கள். கட்சி தொடங்குவது ஜனநாயக உரிமை என்பார்கள். நாம கட்சி தொடங்குவதை நல்லவர்கள் வரவேற்பாங்க. ஒருசிலருக்கு எரிச்சல் வரும். திடீர்னு ஒருத்தன் என்டரி கொடுக்கிறானே என்று.
நாம சொன்ன பொய்ய இதுவரை கேட்டாங்க, இப்போது இவன் பேச்ச கேட்கிறாங்க. இவனை என்ன பண்ணலாம். க்ளோஸ் பண்ணலாம்ன்னு பார்க்கிறார்கள். அப்போது கன்பியூசன் வரும். அந்த கன்பியூசன்ல கத்துறாங்க, கதறராங்க. வர்றவன், போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான் என பேசுவாங்க. ஆட்சியில் இருக்கிறவங்க நம்மள பேசுறாங்க இல்லையா, அதமாதிரி.
எதிர்ப்புகளை எல்லாம் லட்டர்ல டீல் பண்றாங்க. ஒரு அரசியல் கட்சிக்கு பலமே அந்த கட்சியின் கட்டமைப்பு தான். ஆலமரம் போல கட்சி வளர வேர், விழுதுகள் முக்கியம். இந்த நேரத்தில நம்ம மேல ஒரு கம்ப்ளைண்ட். மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் இளைஞர்களாகவே இருக்கிறார்கள்.
ஏன் இளைஞர்கள் இருந்தால் என்ன, அண்ணா, எம்..ஜிஆர் பின்னால் நின்னது இளைஞர்கள் தான். அதனால் தான் வெற்றி பெற்றார்கள். அது தான் வரலாறு. நம்முடைய நிர்வாகிகள் எல்லாம் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்கிறார்கள். ஏன் சாதாரண குடும்பத்தில் இருந்து வரக்கூடாதா, சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் சாதித்து இருக்கிறார்கள்.
நம் கட்சி எளியவர்களளுக்கான கட்சி. இது பண்ணையார்கள் கட்சி இல்ல. ஒருகாலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். இப்போது பதவியில் இருப்பவர்கள பண்ணையார்களாக மாறி விடுகிறார்கள். மக்கள் நலன், நாட்டு நலன் பற்றி எதை பற்றியும் கவலைப்படவில்லை. பணம், பணம் என யோசிக்கிறார்கள்.
இந்த பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவது தான் நம்முடைய வேலலை. 2026 தேர்தலை சந்திக்க போகிறோம். பூத் ஏஜெண்ட் ஸ்டாரங்கா இருக்கணும். நம்முடைய தோழர்களை அனைத்து பூத்களிலும் பூத் ஏஜெண்டுகளாக நியமிக்க போகிறோம். விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்த போகிறோம். அன்று தெரியும். தவெக யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தவெக தான் முதல்சக்தி என்பது அப்போது தெரியும்.
மும்மொழி கொள்கை, இப்போது புதிதாக கிளம்பி உள்ளது. தமிழ்நாட்டுல மும்மொழி கொள்கையை செயல்படுத்தலன்னனா, கல்விக்கான நிதி தர மாட்டாங்களாம். எல்கேஜி யுகேசி பசங்க சண்ட போல சண்டை போட்டுகிட்டு இருக்காங்க. வாங்க வேண்டியது இவர்கள் உரிமை. கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை. அதுதான் பாசிசமும், பாயாசமும் சண்டை போடுகிறார்கள்.
பேசி வச்சிக்கிட்டு, மாத்தி, மாத்தி ஹாஸ்டேக் போட்டு சோசியல் மீடியாவில் விளையாடுகிறார்கள். இரண்டு பேரும் அடிச்சிகிற மாதிரி அடிச்சுக்குவாங்க. அத நாம நம்பணுமா, இட்ஸ் வெரி ராங் புரோ,
எல்லோரையும் மதிப்போம், சுயமரியாதையை விட்டு கொடுக்க மாட்டோம். எல்லா மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் எந்த பள்ளியிலும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அது அவர்களது தனிப்பட்ட உரிமை. மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக, கல்வியில், இன்னொரு மொழியை திணிக்காதீர்கள். அரசியல் ரீதியாக வேறு மொழியை திணித்தால் இங்கு வெற்றி பெற முடியாது.
நல்லதே நடக்கும் .
இவ்வாறு அவர் பேசினார்.