கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில். கடந்த 23 தேதி ஞாயிற்றுக்கிழமை பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகில் ஹஸ்னா என்பவர் 1. 1/2 பவுன் நகையை தவறவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாப்புலர் எக்ஸ்பிரஸ் என்ற வாட்ஸப் தளம் 15000 நபர்களுடன் தளமானது செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளப்பட்டி மற்றும் உலகளவில் நடக்கும் நிகழ்வுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகை காணாமல் போனது குறித்து பதிவுவெளியிட்டிருந்தனர். ஜெய்லானி என்ற நபர் கீழே கிடந்த நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பதற்காக பாப்புலர் எக்ஸ்பிரஸ் வாட்ஸப் தளம் அட்மின் அபுதாஹிர் அவர்களிடம் கொண்டு வந்து இன்று ஒப்படைத்தார் சுமார் 75,000 மதிப்பிலான இந்த நகையை ஒப்படைத்த ஜெய்லானிக்கு பாராட்டி பரிசு பொருட்கள் வழங்கி கௌரிக்கப்பட்டு அந்த நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.