Skip to content

கள்ளக்காதலை கண்டித்த மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தாய்!…

திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் -ஜெயந்தி.இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி (27), புவனேஸ்வரி (25) என இரண்டு பிள்ளைகள் உள்ளன இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். சங்கர் கொரோனாவில் உயிரிழந்த நிலையில் மகனுடன் ஜெயந்தி (43) வசித்து வருகிறார். தாய் ஜெயந்தி தொடுகாடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பல ஆண்டுகளாக  தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். அப்போது ஜெயந்திக்கும் அதே தொழிற்சாலையில் பணியாற்றும் சூப்பர்வைசருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை விட்டு வீட்டிற்கு வந்தால் ஜெயந்தி எந்த நேரமும்  சூப்பர்வைசரிடம் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதை மகன் பலமுறை தாயை  கண்டித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தாய் சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக மகனிடம் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் தாய் தான் செல்லக்கூடிய கம்பெனிக்கு வேலைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் தாய் மகன் பேச்சை கேட்காமல் அந்த தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய முன்தினம் மீண்டும் தனது தாயிடம் தனியாக கார் எடுத்து தொழில் செய்ய இருப்பதால் ரூ.2 லட்சம் பணத்தை  கேட்டுள்ளார். இல்லையென்றால் நிலத்தை விற்று பணம் அளிக்குமாறு கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தாய் ஜெயந்தி மகனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

இரவு முழுவதும் ஜெயந்தி தூங்காமல் அவர் மகனை கொல்ல திட்டம் தீட்டி வந்துள்ளார். நேற்று அதிகாலை  வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து பாத்திரத்தில் பெட்ரோல் பிடித்து, பத்திரமாக  வைத்துள்ளார். மகன், மருமகள், பேரக் குழந்தைகள் ஒன்றாக கீழே படுத்து உறங்கிக் கொண்டிருந்ததால் மகனை மட்டும் தனியாக கொல்ல வேண்டும் என யோசித்த அவர், மருமகள் பேரக்குழந்தைகளை  படுக்கையில் இருந்து எழுப்ப முயற்சித்துள்ளார். ஆனால் மருமகள் எழுந்துக்காததால் கால் பாதத்தில் கட்டையால் அடித்து எழுந்து வேலை செய்யுமாறு எழுப்பி உள்ளார். அதேபோன்று படுக்கையில் இருந்த பேரக் குழந்தைகளும் எழுப்பி வெளியே அனுப்பி உள்ளார்.

சரியாக காலை 7 மணி அளவில் மருமகள், பேரக்குழந்தைகள்  வெளியே சென்றிருந்த நிலையில் ஜெயந்தி தான் பாத்திரத்தில் பிடித்து வைத்திருந்த பெட்ரோலை மகன் போர்த்தி தூங்கிக் கொண்டிருந்த போர்வை மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். கிருஷ்ணமூர்த்தி தீ பற்றி அலரி வீட்டிற்கு வெளியே ஓடிவந்துள்ளார். அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர் உடலில் பற்றிய தீயை தண்ணீர் ஊற்றி அணைத்து  திருவள்ளுர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், இரவு சிகிச்சை பலனின்றி பலியானார். இது தொடர்பாக மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து பெற்ற மகனையே பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்த தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!