Skip to content

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம் வழக்கறிஞர் சங்கத்தில் நடந்தது. தலைவர் முல்லை சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பி.வி. வெங்கட், துணைத் தலைவர்கள் சசிகுமார்,பிரபு இணை செயலாளர் விஜய் நாகராஜன், பொருளாளர்
கிஷோர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பார் கவுன்சிலில் இருந்த வந்த கடிதத்திற்கு பதில் குறித்து விவாதித்து பதில் அனுப்பப்பட்டன. அடுத்து சங்க உறுப்பினர் எஸ் எழிலரசி கொடுத்த மனுவில் நமது சங்கத்தை முறைப்படி புதுப்பித்து ஒன் பார் ஒன் ஓட்டு எடுத்த பிறகு சங்க தேர்தலை நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. மேலும் சங்கத்தின் 17 ஆண்டுகளாக உள்ள குறைபாடுகளை சரி செய்து சங்கத்தை புதுப்பித்து ஒன் பார் ஒன் ஓட்டு சரி செய்த பிறகு மூத்த உறுப்பினர்களைக் கொண்டு சங்க தேர்தல் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

error: Content is protected !!