மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடைபெற்றது.
கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் பாஜக அரசை கண்டித்து, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடைபெற்றது.
இந்த திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சரவணமூர்த்தி தலைமை வகித்தார். மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாணிக்கம் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தோழமை மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்