நாளாயிற்று, நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன் நண்பர் கமல்ஹாசன் அவர்களை. ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார். அரசியல் பேசினோம், கலை குறித்துக்கலந்தாடினோம், உடல் நிலை, உணவு நிலை குறித்து அறிவாடினோம். சமூக ஊடகங்கள் குறித்துத் தெளிவு பெற்றோம். “செயற்கை நுண்ணறிவில் உங்களுக்குப் பயிற்சி உண்டா” என்றார். “செயற்கை நுண்ணறிவைக் கவிதைக்குப் பயன்படுத்தினேன். ஆனால் அதில் ஜீவன் இல்லை” என்றேன் அடுத்த படத்திற்கான தலைப்பைச் சொன்னார்.
“நன்று; யார் சொன்னாலும் மாற்றாதீர்கள்” என்றேன். டெல்லிப் பட்டணத்திற்கான சமிக்ஞை தெரிந்துகொண்டேன், மகிழ்ந்து விடைகொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
