தஞ்சாவூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (47). கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகளை திருடிக் கொண்டு அதனை ஆட்டோவில் ஏற்றினர்.
அப்போது ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்தனர். உடன் அந்த மர்ம நபர்கள் ஆட்டோவில் ஏறி தப்ப முயன்றனர் . அதற்குள் பொதுமக்கள் ஆட்டோவை சுற்றி வளைத்து 2 பேரையும் பிடித்து மருத்துவக்கல்லூரி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தஞ்சை ரெட்டிபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (46), சிங்கப்பெருமாள் குளத்தை சேர்ந்த சந்துரு (36) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.