தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி கே.கே.நகரில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருந்தகத்தை பார்வையிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருந்துகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் சரவணன், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் அரசு, அமராவதி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் திருப்பதி, சரக துணை பதிவாளர் முத்தமிழ்செல்வி,திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சார்பதிவாளர், செயலாட்சியர் செந்தில்குமார், மண்டல தலைவர் துர்காதேவி
மற்றும் மாமன்ற உறுப்பினர் கவிதா செல்வம், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்