Skip to content

கடவூர் அருகே மாணவிக்கு கத்திக்குத்து சம்பவம்: நடந்தது என்ன? கரூர் போலீஸ் விளக்கம்

கரூர் மாவட்டம்  கடவூர் பகுதியை சேர்ந்த   பள்ளி மாணவி நேற்று இரவு  பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டதாக  ஊடகங்களில் இன்று செய்தி வெளியானது. இது குறித்து கரூர் மாவட்ட காவல்துறை நடந்தது என்ன என்பது குறித்து விளக்கம் அளித்து உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

23.02.2025 ஆம் தேதி இரவு கடவூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 15
வயது மாணவி இரவு8 மணிக்கு வீட்டில் இருந்த போது மாணவியின்
உறவினரான அதே ஊரைச் சேர்ந்த 17 வயது மாணவன் இன்ஸ்டாகிராம்
மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வெளியே வரவழைத்து கத்தியால்
கழுத்துப் பகுதியில் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் அவர்அணிந்திருந்த ஒரு பவுன் செயினையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இது குறித்து விசாரணையில் மேற்படி மாணவி அந்த மாணவனைப்பற்றிஇழிவாக பேசியதாக கோபம் கொண்டு இந்த செயலை அந்த மாணவன்செய்துள்ளதாக தெரிகிறது.

மேற்படி மாணவன் கைது செய்யப்பட்டு
விசாரணையில் உள்ளார். இந்நிலையில் மேற்படி செய்தியை கூட்டுப்பாலியல்
பலாத்காரம் செய்து கத்தியால் குத்தியதாக சில செய்தி சேனல்களில் தவறான
செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களை
செய்தியாக வெளியிட வேண்டாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!