செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் கலெக்டரின் வாகனத்திற்கு போக்குவரத்து துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் கலெக்டராக பணியாற்றிய அனாமிக ரமேஷ் பயன்படுத்திய அரசு வாகனம் கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் தலைமை செயலாளரின் வருகையின்போது மாமல்லபுரம் பகுதியில் அதிவேகமாக 105 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது.
இந்நிலையில், தற்போது அதிவேகமாக சென்றதற்காக போக்குவரத்துதுறை சார்பில் ரூ.1000 அபராதம் விதிப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அருகே அதிவேகத்தில் சென்றதாக போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், அபராதம் விதிக்கும்போது பணியில் இருந்த கூடுதல் கலெக்டர் பணி மாறுதல் பெற்று சென்ற பின்னர் தற்போது பணியில் இருக்கும் கூடுதல் கலெக்டருக்கு அபராதம் குறித்து குறுஞ்செய்தி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.