திருவாரூரில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய சரக்கு ரயில். திருவாரூரில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.இச்சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டியை சரிசெய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
