ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டி நேறற் துபாயலி் நடநத்து. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணி 49.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஸ்வான் 46 மற்றும் குஷ்தில் ஷா 38 ரன்கள் எடுத்தனர்.
இறுதிவரை களத்தில் இருந்த கோலி, 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் அடங்கும். 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்து வீச்சும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.
இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலியின் பார்ம் குறித்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அணியில் அவரது இருப்பு குறித்த கேள்வி கேட்கப்பட்டது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் உடனான போட்டியில் சதம் விளாசி பார்முக்கு திரும்பியுள்ளார். இந்தப் போட்டிக்கு முன்னதாக பயிற்சிக்கு முன்கூட்டியே கோலி வந்திருந்ததாகவும் தகவல் வெளியானது.
ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000+ ரன்களை கோலி கடந்து சாதனை படைத்துள்ளார். 287 இன்னிங்ஸில் இந்த ரன்கள் எடுத்து கோலி சாதனை படைத்துள்ளார். இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை கோலி வென்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் இது கோலியின் 51-வது சதம் ஆகும். இதன் மூலம் அவர் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார்.( சச்சின் 350வது இன்னிங்சில் தான் 51வது ஒரு நாள் நாள் போட்டி சதம் அடித்தார்) அடுத்த போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் குரூப் சுற்றில் விளையாடுகிறது.
இன்று நியூசி- வங்கதேசம் ராவல்பிண்டியில் விளையாடுகிறது. இதில் நியூசிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அரை இறுதிப்போட்டிக்கு ஏ குரூப்பில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.
பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய தை இந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.