தமிழக முதல்வர் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் கடந்த 21, 22-ஆம் தேதி வந்திருந்தார் 21-ஆம் தேதி கடலூர் மஞ்சகுப்பத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள திடலில் 5000 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியிலிருந்து இணைந்தனர். பின்னர் அவர் அன்று இரவு நெய்வேலியில் விருந்தினர் இல்லத்தில் தங்கினார். பின்னர் அவர் 22 ஆம் தேதி காலை நெய்வேலியில் இருந்து வேப்பூர் அருகே உள்ள திருப்பெயர் கிராமத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழக ஏழாவது மாநாட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது நெய்வேலி மந்தாரகுப்பத்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மணமக்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வருகையை ஒட்டி அவர்கள் சாலையில் நின்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்தனர். அந்த நிலையில் முதல்வர் அவர்கள் வரும்பொழுது அப்பொழுது மணமக்கள் மற்றும் நரிக்குற சமூகத்தினர் முதல்வர் அவர்கள் வாகனத்தின் முன்பு சென்றனர். பின்னர் அவர்கள் முதல்வரிடம் தாலியை கொடுத்து தாலி அவர், கையாலே மணமக்களுக்கு எடுத்துக் கொடுத்து திருமணத்தை சாலையிலே நடத்தி வைத்தார். பின்னர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி நரிக்குறவர் சமூக மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.