திருச்சி தென்னூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் துரை.வைகோ எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் மாணவர்கள் விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
மாணவர்களின் கல்வி விஷயத்தில் பாஜக ஒன்றிய அரசுதான் அரசியல் செய்கிறது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வர வேண்டிய சமக்கர சிக்ஷா அபியான் ஒன்றிய அரசின் திட்டத்தில் 24.25ம் ஆண்டுக்கு 2142கோடி, 23 -24ம் ஆண்டுக்கு 249 கோடி 2400 கோடிக்கு மேல் தமிழகத்திற்கு பணம் வர வேண்டி உள்ளது.
அரசு பள்ளி ஆசிரியருக்கு சம்பளம், பள்ளி பராமரிப்பு விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வி தர வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் இலவச கல்வி கொடுப்பதற்கு அந்த பள்ளிகளுக்கு வேண்டிய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க முடியவில்லை.
தேசிய புதிய கல்விக் கொள்கையில் தமிழகம் முழுவதுமாக உடன்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் நமக்கும், அவர்களுக்கும் உள்ள உடன்பாடு இல்லை என்னவென்றால் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர்.
தமிழகத்தில் காலம் காலமாக இரு மொழிக் கொள்கைகள் உள்ளது என தமிழக அறிவிக்கிறது. சமக்கர சிக்ஷா அபியான்
திட்டத்தில் உள்ள அனைத்து வரைமுறைகளையும் தமிழக கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. எனவே, அந்தத் திட்டத்திற்கான நிதியை தரவேண்டும். இந்தத் திட்டத்தையும் தேசிய கல்விக் கொள்கை ஏன் ஒன்று சேர்க்கிறீர்கள். இந்த திட்டத்திற்கான இதை ஏன் நிறுத்துகிறீர்கள் என்பதுதான் தமிழக முதல்வரின் கேள்வியாக இருக்கிறது.
இருமொழிக் கொள்கையால் தான் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. தேசிய கல்வித் திட்டத்தில் 3,5,8 ஆகியவற்றில் தேர்வு கிடைக்காது என தெரிவிக்கிறார்கள். ஆனால் அசெஸ்மென்ட் உண்டு என்று தெரிவிக்கின்றனர். ஆனால் கட்டாயமாக தேர்வு கட்டாயமாக இருக்கும். இதனால் மாணவர்களுக்கு மனச்சுமை ஏற்படும். மத்திய அரசு 2047ல் உயர் கல்விக்கு செல்லும் சதவீதம் 50சதவீதம் போக வேண்டும் என கூறுகின்றனர். அதை தமிழகம் அடைந்துவிட்டது.
தமிழ்நாடு இந்திய வரைபடத்தில் உள்ளது ஆனால் பிரதமர் மனதிலோ, நிதி அமைச்சர் மனதிலோ இல்லை. தமிழகத்திற்கு பேரிடர் புயல் வெள்ளம் நிதி 38,000 கோடி கேட்கப்பட்டிருந்தது இதுவரை வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்டு பின்னர் கொடுத்தது 276 கோடி தான். வளர்ச்சி திட்டத்திற்கும், 100நாள் திட்டத்திற்கும் வழங்குவதில்லை. வருடம் தோறும் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தை நிறுத்த முயற்சிக்கின்றனர்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மிரட்டி கையெழுத்து வாங்கி உள்ளனர்.
முதல்வர் எழுதிய கடிதம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .
தற்போது கல்வி ஒத்திசை பட்டியலில் உள்ளது ஆனால் தற்போது என்ன நடக்கிறது நாங்கள் கொண்டு வந்துள்ளோம் நீங்கள் கையெழுத்து போட வேண்டும். கையெழுத்து போடாவிட்டால் நாங்கள் நிதி தர மாட்டோம் என தெரிவிக்கின்றனர். இதுதான் கூட்டாட்சிக்கு எதிரானது.
தமிழகத்தில் 58 ஆயிரம் பள்ளிகளில் உள்ளன. இதில் 12000 தனியார் பள்ளிகள். இதில் சிபிஎஸ்சி பள்ளியில் எண்ணிக்கை 1800 உள்ளன.
சிபிஎஸ்சி பள்ளியில் நிர்பந்தம் காரணமாக ஹிந்தி படிக்கின்றனர்.
மொழிகளைப் பொறுத்தவரை தமிழகத்தில் தாய் மொழி உள்ளது, ஆங்கிலமும் உள்ளது. தற்போது மூன்றாவது மொழி கொண்டு வந்தால் மாணவர்களின் சுமை அதிகமாகும். ராகுல்காந்தி நேற்று கூறியுள்ளார் பாஜக தலைவர்கள் ஹிந்தி மொழியில் தான் பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் இது தேசிய மொழி ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளக் கூடாது என கூறுகின்றனர் –
எத்தனை பாஜக தலைவர் பிள்ளைகள் ஹிந்தி வழியில் படிக்கிறார்கள், அனைவரும் ஆங்கில வழியில் தான் படிக்கின்றனர்.
ஆங்கிலம் தெரிந்ததால் உலகம் முழுதும் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்ஐ விரும்புவதற்கான காரணம் நீட் படிப்பில் சிபிஎஸ் பாடத்திட்டம் உள்ளதால் படிக்கின்றனர். தற்போது மாநில கல்வி திட்டமும் சிபிஎஸ்சி கல்வித் திட்டத்திற்கு இணையாக மேம்படுத்தி உள்ளனர். நுழைத்தேர்வு என்பதே தேவையில்லாதது. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அந்த மதிப்பெண்ணை வைத்து செல்கின்றனர்.
இதற்கிடையில் எதற்காக நுழையத் தேர்வு. தமிழகத்தின் கருத்து ஆங்கிலத்தை பொது மொழியாக வையுங்கள். வடநாட்டைப் பொறுத்தவரை இந்தி மட்டும் தான் தெரிகிறது ஆங்கிலம் தெரியவில்லை. ஒன்றிய அரசு நிறுவனம் கொடுத்துள்ள ஒரு அறிக்கையில்
பாலியல் வன்கொடுமையில் பாஜக மூன்றாவது முறையாக ஆளுகிற மாநிலமான உத்தரபிரதேசம் முதல் மாநிலமாக உள்ளது, இதற்கு அடுத்தபடியாக டில்லி உள்ளது. டெல்லியில் இதுவரை ஆம்ஆத்மி ஆண்டு இருந்தாலும் சட்டம் ஒழுங்கு அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தமிழகத்தில் தவறு நடக்கும் போது அரசு உடனடியாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கிறது . இவ்வாறு துரை வைகோ எம்.பி கூறினார். பேட்டியின் போது ம.தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா,மாவட்டச் செயலாளர்கள்
வெல்லமண்டி சோமு,மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.