Skip to content

பூஜை போடுவதற்காக சென்ற புதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து…

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென் கீரனூர் கிராமத்தைச்  சேர்ந்த மாயகண்ணன் புதிதாக வாங்கப்பட்ட  ஆட்டோ உடன் குடும்பத்தாரை குலதெய்வ கோயிலுக்கு அழைத்துச் செல்லும்போது கள்ளக்குறிச்சி சேலம் சாலை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் குறுக்கே வந்த இரண்டு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதாமல் இருக்க முயன்ற போது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆட்டோவை அப்புறப்படுத்தி அதில் குடும்பத்தோடு வந்த ஆட்டோ டிரைவர் மற்றும் பெண்கள் உட்பட நான்கு பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், நான்கு பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே கடன் வாங்கி வாங்கிய ஆட்டோ ஒரே வாரத்தில் விபத்தில் சிக்கி சேதமடைந்த சம்பவம் ஆட்டோ டிரைவருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!