Skip to content

மத்திய அரசை கண்டித்து , 25ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்,  துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் குறிப்பாக, மதத்தின் பெயரால் பிற்போக்குச் சிந்தனையை தமிழ்நாட்டில்  விதைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அரசின் சதி திட்டத்தை முறியடிக்க பகுத்தறிவுப் பிரசாரம் மேற்கொள்வோம், மத்திய கல்வி மந்திரியின் ஆணவப் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு தமிழ்நாட்டின் கல்வி நிதியை வழங்கும் வரையில் தமிழ்நாடு முழுவதும் தொடர் மாணவர் போராட்டம், இந்தியை திணிக்கும் மத்திய அரசுக்கு   எதிராக 25-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப்போராட்டம்  நடத்துவது என  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 25-ந்தேதி மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

error: Content is protected !!