திருச்சி பொன்மலை ஜி கார்னர் ஜங்ஷன் பகுதியில் பொன்மலை இன்ஸ்பெக்டர் வடிவேல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அப்பொழுது அவர்கள் நான்கு பேரும் போதை மாத்திரை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (வயது 26) ஜமீம் பாஷா (வயது 23) சதீஷ்குமார் (வயது 26) கணேஷ் பாண்டியன் (வயது 20) என தெரியவந்தது.
மேலும் இவர்கள்
போதை மாத்திரைகளை விற்க இருந்தது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 1,100 போதை மாத்திரைகள் மற்றும் செல்போன்கள் இரண்டு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.
இதே போன்று திருச்சி எடத்தெரு பகுதியில் காந்தி மார்க்கெட் போலீசார் திடீரென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு இரு சக்கரத்தில் வந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அப்பொழுது பிடிப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்கள். இதை தொடர்ந்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் தவ்ஹீத் (வயது 21) அஜ்புதீன் (வயது 25) என்பது தெரிய வந்தது.மேலும் இவர்கள் இரண்டு பேர் சேர்ந்து அந்த பகுதியில் போதை மாத்திரைகளை
விற்பனை செய்ய வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.இவர்களிடமிருந்து இரண்டு செல் போன்கள், பணம் மற்றும் 500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து தவ்ஹீத் ,அஜ்புதீன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
