கரூர் மாவட்டம், வெண்ணமலை அருகே உள்ள அன்பு நகர் மூன்றாவது கிராஸ் பகுதியில் வேணி, சதாசிவம் ஆகியோர் மகன் ராஜசேகர் ஆகிய மூன்று பேர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த ஏசியில் இருந்து புகை வந்துள்ளது. அருகில் இருந்த பொதுமக்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், நிலைய அலுவலர்
திருமுருகன் தலைமையான ஐந்து தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்பு தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும்,வீட்டிற்குள் உள்ளே சென்று பார்த்த பொழுது வீடு முழுவதும் எரிந்து நாசமானது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீ பற்றியதால் வீடு முழுக்க பொருட்கள் தீக்கிரையாகின.
சம்பவ இடத்தில் வெங்கமேடு காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.