ஜீன்ஸ், ஜென்டில்மேன், பாய்ஸ், 2.0, அந்நியன், கேம்சேஞ்சர், இந்தியன் என பல பிரமாண்ட படங்களை இயக்கியவர் ஷங்கர். இவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு அவருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து அவர், அப்போது வழக்கறிஞருடன் வந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு 3 மணி நேரம் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில், 2022ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்புள்ள 3 அசையாச் சொத்துகளை கடந்த 17 ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உத்தரவிட்டு உள்ளனர்.
இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்.. E.D தகவல்..
- by Authour
