சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. இதில் 8 அணிகள் ஆடுகிறது. இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியா-வங்கதேசம் முதல் லீக் போட்டி இன்று வங்கதேசத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி தொடக்க வீரர்களாக சவுமிய சர்க்கார், தமீம் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேசம் திணறியது.
வங்கதேச அணியின் அதிரடி வீரர் சௌமியா சர்க்கார் தேவையில்லாமல் ஒரு ஷாட் ஆட முற்பட்டபோது, அது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் ராகுல் இடம் கேட்ச் ஆனது. அவர் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இந்திய அணி முதல் ஓவரில் முதல் விக்கெட்டை எடுத்தது. இதன் பிறகு ஆட்டத்தில் இரண்டாவது ஓவரை ஐபிஎல் ஸ்டார் ஹர்ஷித் ரானா வீசினார்.
வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ, ஹர்சித் ராணாவின் பந்துவீச்சை அடித்து ஆட முற்பட்டார். அது ஃபீல்டரிடமே கேட்ச் ஆனது. “இதனால் அவரும் டக்அவுட் ஆகி வெளியேற வங்கதேச அணி இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்ததாக தமீமும் டக் அவுட் ஆனார். 3 வீரர்கள் ஆரம்பத்திலேயே டக் அவுட் ஆனது வங்கதேசத்திற்கு பெரும் நெருக்கடியானது.
அடுத்த வந்த 2வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற வங்கதேசம் 12 ஓவர்களில் 49 ரன்களுக்க 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 15 ஓவர் முடிவில் வங்கதேசம் 62 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பிறகு வந்த தௌஹித் ஹிர்டாய்(16ரன்), ஜேக்கர் அலி(16ரன்) ஆகியோர் நிதானத்துடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.
இந்த அணியில் சமி, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ராணா ஒரு விகெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து வங்கதேசத்தின் ஆட்டம் தடுமாற்றத்துடனேயே காணப்பட்டது.